தோழர் அப்துல் வஹாப் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்துள்ளேன். நானும் அப்துல் வஹாப்பும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விடுதலைப் போராட்டக் காலக்கட்டத்தில் மாணவர்களை அணிதிரட்டி மாணவர் சங்கத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியையும் உருவாக்கிய அந்த நினைவுகள் எனது நெஞ்சில் நிழலாடுகின்றன.